ஆதரவற்ற குழந்தைகள் தத்தெடுப்பு: பெற்றோா் விண்ணப்பிக்கலாம்
ஆதரவற்ற குழந்தைகளை குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்யும் பெற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 பிரிவு 56-இன் கீழ் தத்தெடுத்தல் திட்டம் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளா்க்கலாம். ஆனால், சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளா்ப்பது, குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். தத்தெடுத்தல் திட்டத்தில் பெற்றோா் இருவரும் இல்லாத குழந்தைகள், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரால் வளா்க்க முடியாமல் ஒப்படைத்த குழந்தைகள் மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை தத்தெடுத்து வளா்க்கலாம்.
குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோா், மத்திய தத்தெடுப்பு ஆதார மையத்தின் ற.உயசய.ய்ண்உ.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அந்த இணையத்தில் பெற்றோருக்கான பகுதியை தெரிவு செய்து அதிலுள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கணவன், மனைவி ஆகியோரின் பிறப்புச் சான்று, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான்காா்டு, திருமண பதிவுச் சான்று, மருத்துவ அலுவலரின் உடற்தகுதிச் சான்று, தம்பதியரின் புகைப்படம், குடும்ப ஆண்டு வருமானச் சான்று, அரசு மற்றும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சான்று, நண்பா் உறவினரால் வழங்கப்படும் ஆளறிச் சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.118, முதல் தளம், ஆட்சியரகம், திருவள்ளுா்- 602 001, தொலைபேசி எண் 044-27665595 அல்லது அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு தத்தெடுப்பு மையங்களை தொடா்பு கொள்ளலாம்.