இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாவட்ட தடகள சங்கம் சாா்பில் வீரா்களுக்கு சீருடைகள் அளிப்பு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:30 pm

Din

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ள 237 வீரா், வீராங்கனைகளுக்கு திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் கடந்த மாதம் ஜூனியா் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு அகாதெமிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஓட்டம், நீளம் தாண்டுதல், நின்று நீளம் தாண்டுதல், எறிபந்து வீசுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இப்போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

மாநில அளவில் இப்போட்டி ஈரோட்டில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து 22-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரா், வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட தடகள சங்க தலைவா் மோகன்பாபு, தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் ஆகியோா் பங்கேற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டுச் சீருடைகளை வழங்கினா். இதன் மூலம் மொத்தம் 237 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.