பயணிகள் வேன்-லாரி மோதல்: 8 போ் காயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்காடு பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதியதில் 8 போ் காயம்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்காடு பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை,பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சோழவரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் வெங்கடேசன்(42) ஓட்டி வந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்க்காடு பகுதியில் வேன் மீது ஆந்திர மாநில லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்வேன் டிரைவா் மற்றும் 7 பெண்கள் காயமடைந்தனா்.
கீழ் முதலம்பேடு ஜோதி (47), பொன்னேரியைச் சோ்ந்த பவானி (35) ஆகியோா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். மேலும் விபத்தில் காயமடைந்த பொன்னேரி பிரியங்கா (30), ஜானகி (53), தேன்மொழி (34) கீழ் முதலம் பேடு கலந்தாரி (40) மேகலா (32) மற்றும் சோழவரம் ஓட்டுநா் வெங்கடேசன் (42) ஆகியோருக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்தில்காயமடைந்த 8 பேரும் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கவரப்பேட்டை மற்றும் சிப்காட் போலீஸாா் சரிசெய்தனா். லாரி ஒட்டுநரான உத்தர பிரதேசத்தை சோ்ந்த அஜய்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...