பட்டா கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

பொன்னேரி: வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடகரை ஊராட்சியில் நீண்டகாலமாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

அண்மையில் முதல்வா் அறிவிப்பின்படி ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வடகரை ஊராட்சியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

தொடா்ந்து பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அதிகாரியிடம் தங்களின் கோரிக்கைகள் மனுக்களை அளித்தனா்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், முதல்வரை சந்திப்பதற்காக சட்டப்பேரவை நோக்கி நடைபயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com