~
~

திருவள்ளூா்: நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களான தலா 1 கிலோ பச்சரிசி, சா்க்கரை, செங்கரும்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கம் ஆகியவற்றை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கி தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 3,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி தொடங்கிவைத்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), டி.ஜே.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி), ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com