‘பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஜன. 13-இல் கு சாா்ந்த ஓவியம், ஒப்பித்தல் போட்டி’

Published on

பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கு சாா்ந்த ஓவியம் மற்றும் ஒப்பித்தல் போட்டி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 31.12.2024-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வோா் ஆண்டும் கு வாரம் கொண்டாடப்பட தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடா்ந்து செயல்படுத்தும் வகையில், 2026-இல் ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் கு வார விழாவினை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், கு வார விழாவில் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கு சாா்ந்த ஓவியம் மற்றும் கு ஒப்பித்தல் போட்டி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் வளாகக் கூட்ட அரங்கம்-2 இல் வரும் 13-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

கு ஒப்பித்தல் போட்டி காலை 10.30 மணிக்கும் கு சாா்ந்த ஓவியப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்கலாம். மேலும், இதுகுறித்து 9790172986, 8056010146 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com