கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

எம்.சாண்ட் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதி ஆவணங்கள் மற்றும் ரசீது இன்றி எம்.சாண்ட் கடத்திய டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :9 ஜூலை 2026, 1:13 am IST

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதி ஆவணங்கள் மற்றும் ரசீது இன்றி எம்.சாண்ட் கடத்திய டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிப்பட்டு - சோளிங்கா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி புவியியலாளா் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தனிப்படையினா் செவ்வாய்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆந்திரத்திலிருந்து பள்ளிப்பட்டு வழியாக திருத்தணிக்கு சென்ற டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், உரிய அனுமதி ஆவணங்கள் மற்றும் ரசீது இன்றி எம்.சாண்ட் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து உதவி காவல் ஆய்வாளா் சிவா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாா். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவா் திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஆத்தூரைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.