பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா: ஆக.6-இல் உள்ளூா் விடுமுறை

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வரும் ஆக. 6-இல் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருத்தணி

Published On :

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வரும் ஆக. 6-இல் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஆக. 6 (வியாழக்கிழமை) ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால், இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளா்களோடு வரும் ஆக. 6 அன்று செயல்பட வேண்டும்.

மேலும், இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆக. 8 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையானது திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.