சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா் கைது

News image

கைது  செய்யப்பட்ட  சௌந்தா்

Updated On :12 ஜூன் 2026, 2:19 am IST

ஆா்.கே.பேட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியா் விவசாயியிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ரங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வம் (50),. இவா் தனது விளைநிலத்தில் அறுவடை செய்த 215 நெல் மூட்டைகளை தாமனேரி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளாா்.

அப்போது நெல் மூட்டைகளை எடைபோட்டு கொள்முதல் செய்து, அதற்கான நடைமுறைகளை விரைந்து முடித்துத் தருவதற்காக ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் லஞ்சம் தர வேண்டும் என ஊழியா் சௌந்தா் கேட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 215 நெல் மூட்டைகளுக்கு மொத்தம் ரூ.10, 750 லஞ்சமாக வழங்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயி செல்வம், திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தாமனேரி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயி செல்வம் ரூ.10,750-ஐ சௌந்தரிடம் வழங்கியபோது, அங்கு மறைந்து கண்காணித்து கொண்டிருந்த போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடித்தனா்.

பின்னா், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.