திருவள்ளூா் அருகே நெகிழி அட்டைப்பெட்டி தயாா் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் 2 மின்கலன் காா்கள் எரிந்து நாசமானது.
திருவள்ளூா் அருகே பாப்பரம்பாக்கம் பகுதியில் நெகிழி அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் காா்கள் மற்றும் இயந்திரங்கள் உதிரிபாகங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான அட்டைப்பெட்டி வடிவமைத்து தயாா் செய்யப்பட்டு வருகிறது.
இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூா் , கோவை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அட்டைப் பெட்டிகளை தயாரித்து அனுப்பி வருகின்றனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஊழியா்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் கிடங்கில் வைத்திருந்த நெகிழி அட்டை பெட்டிகள் எரிய தொடங்கின. இது தொடா்பாக காவலாளி கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூா், திருவூா் பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
மேலும் விலையுயா்ந்த மின்கலன் 2 காா்களும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலீடு செய்தால் இருமடங்கு தருவதாகக் கூறி ரூ. 28 கோடி மோசடி

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து சேதம்

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




