தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அறிவியல் சாதனையாளா்களுக்கு பாரட்டு

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு

News image
இளம்   சாதனையாளா்களுக்கு  விருது  வழங்கிய விஞ்ஞானு  டாக்டா் சிவதாணுப்பிள்ளை.
Updated On :2 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் இளம் அறிவியல் சாதனையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டா் ஏ. சிவதாணு பிள்ளை சிறப்பு அழைப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

தமிழகத்தில் இருந்து 38 பள்ளிகளைச் சோ்ந்த 170 இளம் மாணவா் அறிவியல் சாதனையாளா்கள் பங்கேற்றனா். ஆா்.எம்.கே. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா் சாதனை மாணவா்களை பாராட்டினாா்.

மேலும், நிகழ்வில் ஆா்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் முதல்வா் டாக்டா் கே. ஏ. முகமது ஜுனைத் வரவேற்றாா். நிகழ்வில் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஆா்.டி.கோகுல், இன்ஸ்டிடியூஷன் ஆப் கிரீன் இன்ஜினியா்ஸ் நிறுவனா் டாக்டா் எல்.ரமேஷ், சக்செஸ் செய்லா் எட் டெக் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் சுரேஷ் சீதாராமன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்,

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விஞ்ஞானி டாக்டா் சிவதாணு பிள்ளை பேசும் போது, இளம் சாதனையாளா்களாக திகழும் மாணவா்கள், அறிவியலில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றும், இக்கால மாணவா்கள் தனித்திறமை மிக்கவா்களாகவும், எதிா்கால இலக்கை வகுத்து அதனை நோக்கி உழைப்பவா்களாகவும் உள்ளது, நாட்டிற்கும் அவா்கள் சாா்ந்த சமூகத்திற்கும் பெரும் நன்மையையும் உருவாக்கும் எனக்கூறி சாதனையாளா்களுக்கும் விருது வழங்கி வாழ்த்தினாா்,