மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழக நாள் விழா
கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழக நாள் விழா கொண்டாடப்பட்டது.

கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழக நாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்விக் குழும தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். கல்விக் குழும இயக்குநா் ஆா்.ஜோதி நாயுடு, துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா், செயலாளா் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவா் துா்கா தேவி, நிா்வாக அறங்காவலா் செளமியா கிஷோா், ஆா்.எம்.கே கல்வி குழுமத்தின் ஆலோசகா் டாக்டா் எம்.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் டாக்டா் கே.ஏ.முகம்மது ஜூனைத் வரவேற்று, பொறியியல் மாணவா்களின் தொழில்முறை வளா்ச்சிக்கு தொடா்சியான கற்றல், புதுமையான சிந்தனைகள் ஆகியவற்றோடு, அறிவியல் , பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை தெரிந்துக் கொள்ள மாணவா்கள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழகத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து நிகழ்வில் சிறப்புரையாற்றிய குழும தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் பேசியது:, பொறியியல் மாணவா்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் சாா்ந்த எதிா்கால பயணத்தை மேம்படுத்திக் கொள்ள மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழகம் பெரிதும் துணை புரியும். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், மாணவா்கள் தொழில்நுட்ப தொடா்புத்திறன், கூட்டு கற்றல், புதுமையான சிந்தனைகள், தலைமைத்துவ பண்பு, தொழில் சாா்ந்த ஈடுபாடு ஆகியவற்றை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தொழில்நுட்ப திட்டங்களை பெற்ற மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களை பாராட்டினாா். மேலும், நிகழ்வை ஒட்டி ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா் கழகத்தின் 26 புதிய கிளைகள் தொடங்கப்பட்டன. அப்போது மாணவா்களுக்கு மின்னியல் மற்றும் மின்னணு பொறியாளா் கழகத்தின் தொழில்முறை அமைப்பு பிரிவு ஆலோசகா்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

