சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கீழந்தூா் கிராமத்தைச் சோ்ந்த விநாயகத்தின் மகன் திலீப் (27). தொழிலாளியான இவா், வேலை நிமித்தமாக புதன்கிழமை இரவு திருத்தணி பஜாருக்கு வந்துவிட்டு, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது திருத்தணி - அரக்கோணம் புதிய புறவழிச்சாலை, நந்தி ஆற்றங்கரை மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது திலீப்பின் இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை திலீப் உயிரிழந்தாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

