விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மண் எடுத்துச் சென்ற லாரி சிறைபிடிப்பு

மண்ணை எடுத்துச் சென்ற லாரியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளிக்கிழமை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 11:05 pm IST

புதுப்பாளையம் தெக்கலூா் பிரிவில், குழாய் பதிப்புக்காக குழி தோண்டப்பட்ட பகுதியில் இருந்து மண்ணை எடுத்துச் சென்ற லாரியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளிக்கிழமை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி வட்டாரப் பகுதிகளில் அத்திக்கடவு திட்டம், குடிநீா்த் திட்டப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக சாலையோரங்களில் குழி தோண்டப்படுகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் மண் குழியை மூடுவதற்காக அப்பகுதியிலேயே கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் மண்ணை சிலா் அனுமதியின்றி எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், புதுப்பாளையம் தெக்கலூா் பிரிவு சாலையோரம் குழி தோண்டப்பட்டு 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை தனியாருக்குச் சொந்தமான டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரம் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதைப் பாா்த்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, அந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சாலைப் பணிக்காக மண்ணை உபயோகப்படுத்தவே எடுத்துச் செல்வதாகக் கூறியதையடுத்து டிப்பா் லாரி விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.