இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இந்திய மணமகள்கள் அணியும் நகைகள்: சிறப்பு புத்தகம் வெளியீடு

மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மணமகள்கள் அணியும் நகைகள் குறித்த தகவல்கள் அடங்கிய சிறப்பு புத்தகம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) வெளியிடப்பட்டது.

News image
Updated On :5 ஏப்ரல் 2014, 11:15 pm IST

மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மணமகள்கள் அணியும் நகைகள் குறித்த தகவல்கள் அடங்கிய சிறப்பு புத்தகம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) வெளியிடப்பட்டது.

மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவந்த "இந்தியாவின் மணமகள்கள்' சீசன் 3 வெற்றிகரமாக நிறைவடைந்து, நான்காவது சீசன் தொடங்குவதை முன்னிட்டு, "எனது மகளின் மகிழ்ச்சித் திருவிழா' விற்பனை பிரசாரம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, திருமணத்தின்போது மணமகள் அணியும் விதவிதமான நகைகள் குறித்த தகவல்கள் அடங்கிய இந்திய மணமகள்கள் என்ற தலைப்பிலான புத்தகத்தை நடிகர் சூர்யா வெளியிட்டார். அதன் முதல் பிரதியை பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசியது: இதற்கு முன்பு இந்தியாவின் மணமகள்கள் குறித்த வெளியிடப்பட்ட சிறப்பு புத்தகம் சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கள ஆய்வு செய்து, மேலும் பல புதிய தகவல்களைத் திரட்டி தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் இந்திய பாரம்பரிய திருமண நகைகள் குறித்த புதுமையான செய்திகளை அறிய உதவுகிறது.

திருமண விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் இந்திய மணமகள்கள் அணியும் நகைகள் குறித்த விவரங்களுடன் இடம்பெற்றுள்ள இந்த புத்தகம் நகை விற்பனைத் துறையை மேம்படுத்தும் அம்சமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய மாநிலங்களில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் 21 திருமண நிகழ்ச்சிகள், அவர்கள் மேற்கொள்ளும் சம்பிரதாயங்கள், வெவ்வேறான சடங்குகள் குறித்து அழகிய புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் நகைகள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன. இந்த புத்தகம் தற்காலத்துக்கும் வருங்காலத்துக்கும் ஏற்றதாக உள்ளது என்றார் சூர்யா.

நிகழ்ச்சியில் மலபார் கோல்டு குழுத்தின் மார்க்கெட்டிங் தலைவர் அம்ஜத் ஹுசைன், தமிழ்நாடு மண்டல நிர்வாக தலைவர் ஷஃபீக், சோலையில் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனுப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.