வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பரஸ்பர நிதியங்களின் மதிப்பு ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியது

பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற நிதியாண்டில் ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Updated On :6 ஏப்ரல் 2018, 12:38 am IST

பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற நிதியாண்டில் ரூ.23 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
முதலீட்டாளர் விழிப்புணர்வு பிரசாரங்களால் பரஸ்பர நிதி திட்டங்களில் சிறிய நகரங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சென்ற நிதி ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.4.75 லட்சம் கோடி அதிகரித்து ரூ.23.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2016-17 நிதி ஆண்டில் இந்த சொத்து மதிப்பு ரூ.18.30 லட்சம் கோடியாக காணப்பட்டது.
பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 32 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதையடுத்து, அந்த கால கட்டத்தில் பரஸ்பர முதலீட்டு திட்ட கணக்குகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்து 1.05 கோடியானது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.