மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

4 வாரங்களில் இல்லாத உச்சம்: சென்செக்ஸ் 161 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் அதிகரித்ததையடுத்து மும்பை

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:18 pm

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் அதிகரித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தை நான்கு வாரங்களில் காணப்படாத உயர்வு நிலையை எட்டியது.
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்த நிதி கொள்கையில் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. மேலும், முதல் அரையாண்டில் பணவீக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்து 4.7 சதவீதம் முதல் 5.1 சதவீதம் வரையிலான அளவுக்குள் இருக்கும் என தெரிவித்திருந்தது. இது, முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையின் சோர்வு நிலையைப் போக்குவதாக அமைந்தது. இதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் தொடர் ஏற்றம் கண்டு வருகின்றன.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை கணிசமாக அதிரிக்க வாய்ப்பில்லை என்று வெளியான தகவல், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் நுகர்வோர் சாதனத் துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து அத்துறை குறியீட்டெண் 1.70 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, எண்ணெய்-எரிவாயு 1.52 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 1.15 சதவீதமும், வங்கி, 0.90 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 0.79 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண் 0.67 சதவீதமும் அதிகரித்தன.
இவைதவிர, உள்கட்டமைப்பு, மோட்டார் வாகனம், உலோகம் மற்றும் மின்சார துறை குறியீட்டெண்களும் ஓரளவுக்கு ஏற்றம் பெற்றன.
இருப்பினும், முதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால் தகவல்தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை குறியீடெண்கள் 0.99 சதவீதம் வரை குறைந்தன.
ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 3.44 சதவீதமும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகளின் விலை 2.15 சதவீதமும் உயர்ந்தது.
அதேசமயம், இன்போசிஸ் பங்குகளின் விலை 1.62 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.53 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.21 சதவீதமும் சரிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 161 புள்ளிகள் உயர்ந்து 33,788 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 10,379 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.