மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்ஸ்டாகிராமில் வந்தது புதிய அம்சம்: அடடே ஆறு!

ன்ஸ்டாகிராமில் வந்தது புதிய அம்சம்: அடடே ஆறு!

News image
Updated On :18 டிசம்பர் 2019, 2:07 pm

DIN


இன்ஸ்டாகிராம் செயலியில் லேஅவுட் அம்சம் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு புகைப்படங்களைப் பதிவேற்றலாம். இது நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ஆனால், அவை இன்ஸ்டாகிராம் பதிவுகளில் மட்டுமே சாத்தியமாக இருந்து வந்தது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்ஸில் இதற்கான அம்சங்கள் ஏதும் இல்லை.

இந்நிலையில், ஸ்டோரிஸ்ஸிலும் பல்வேறு புகைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவேற்றுவதற்கான அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவுகளில் இருந்த லேஅவுட் அம்சத்தை தற்போது ஸ்டோரிஸ்ஸிலும் அந்தச் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்மூலம், பயனாளர்கள் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்ஸிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒரே சமயத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு, இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள இன்ஸ்டா ஸ்டோரிஸ் கேமிராவில் லேஅவுட் அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். இதையடுத்து அதில் புகைப்படங்களை ஒன்றிணைக்க வேண்டும். இதன்பிறகு, வழக்கம்போல் அதை வெளியிட வேண்டும்.

இந்த அம்சத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலி தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. எனவே, இந்த வார இறுதியில் இது அனைத்துப் பயனாளர்களுக்கும் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.