
கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகள் 30 நாள்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும் என்ற அறிவிப்பை கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் டிரைவ் என அழைக்கப்படும் கூகுள் சேமிப்பகம் தங்களது பயனர்களுக்கு கோப்புகளை சேமிக்கும் வசதியை வழங்கி வருகிறது.
தற்போது, கூகிள் சேமிப்பகத்தில் கழிக்கப்பட்ட கோப்புகளை காலவரையின்றி வைத்திருக்கும் முறை நடைமுறையில் உள்ளது. முன்னதாக கழிக்கப்பட்டக் பகுதியில் உள்ள (ட்ராஸ்) கோப்புகள் பயனரால் காலியாக்கப்படும் வரை காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 13 முதல், கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகளை அதன் இயங்குதளத்தில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு தானாக நீக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.