போக்கோ எக்ஸ் 2 இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனை

பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட் போன் ஃபிளிப்கார்ட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
போக்கோ எக்ஸ் 2 இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனை

பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட் போன் ஃபிளிப்கார்ட்டில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது. 

ரெட்மி, ரியல்மி தயாரிப்புகளைத் தொடர்ந்து போக்கோ தயாரிப்புகளும் சந்தையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. 

இதன் தயாரிப்புகளில் ஒன்றான போக்கோ எக்ஸ் 2 கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக, கடந்த மார்ச் 3 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. அப்போது சில மணி நேரங்களிலேயே போக்கோ எக்ஸ்2 விற்றுத் தீர்ந்தது. இதைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ரியல்மிக்கு போட்டியாக இது சந்தையில் களமிறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. 

போக்கோ எக்ஸ் 2, 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 16,999, 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999. ஃபிளிப்கார்ட்டில்  ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

போகோ எக்ஸ் 2 பியோனிக்ஸ் ரெட், அட்லாண்டிஸ் ப்ளூ மற்றும் மேட்ரிக்ஸ் பர்பில் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com