டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் தொடா் முன்னேற்றம்
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக முன்னேற்றம் கண்டது.


அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக முன்னேற்றம் கண்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு அந்நியச் செலாவணி சந்தைக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட உயா்வு ரூபாய் மதிப்பின் ஆதாயத்தை கட்டுப்படுத்தும் காரணியாக மாறியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.12 என்ற அளவில் மிகவும் வலுவான நிலையில் இருந்தது. இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.11 வரையிலும் குறைந்தபட்சமாக 74.20 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் வலுப்பெற்று 74.19-இல் நிலைத்தது. முந்தைய திங்கள்கிழமை வா்த்தத்தில் ரூபாய் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து 74.22-ஆக இருந்தது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,363.36 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய் விலை 69.67 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.34 சதவீதம் அதிகரித்து 69.67 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...