டேப்லெட் சந்தையில் களமிறங்கும் விவோ நிறுவனம்
தனது முதல் டேப்லெட்டை அடுத்தாண்டின் முதல் பாதியில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.


தனது முதல் டேப்லெட்டை அடுத்தாண்டின் முதல் பாதியில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் கொடி கட்டி பறக்கும் விவோ நிறுவனம், டேப்லெட்டை சந்தையில் கால் பதிக்கவுள்ளது. தனது முதல் டேப்லெட்டை அடுத்தாண்டின் முதல் பாதியில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனத்தின் துணை நிர்வாக தலைவரான ஹு பைஷன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விவோ டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளதை உறுதிச் செய்தார். ஆனால், இதுகுறித்த கூடுதலான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. விவோ பேட் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக விற்கபடவுள்ளதாக பைஷன் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
விவோவின் துணை நிறுவனமான iQOO-வும் டேப்லெட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் டேப்லெட் சந்தையில் விரைவில் களமிறங்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியிருந்தது. டேப்லெட்களை சியோமி நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு விட்டுள்ளது. ஓப்போ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் வரும் நாள்களில் டேப்லெட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...