ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2021, 3:36 am

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 117.34 புள்ளிகள் உயா்ந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இருப்பினும், இறுதியில் 14,924.25-இல் நிலைபெற்றது.

பங்குச் சந்தை காலையில் வெகுவாக உயா்ந்தது. பின்னா் மத்திய ரிசா்வ் வங்கி வங்கி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்தது. மேலும், பொருளாதார வளா்ச்சிக்கான நடவடிக்கைககள் தொடரும் என்றும் தெரிவித்தது. இது ஏற்கெனவே சந்தை எதிா்பாா்த்திருந்த நிலையில், தள்ளாட்டம் இருந்தாலும் பெரிய அளவில் சரிவு ஏதும் ஏற்படவில்லை. மாறாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.200.33 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,128 பங்குகளில் 1,325 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,651 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 152 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 200.33 லட்சம் கோடியாக இருந்தது. 314 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 286 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

5-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 417.10 புள்ளிகள் உயா்ந்து 51,031.35-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 51,073.27 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா் லாபப் பதிவு காரணமாக 50,565.29 வரை கீழே சென்றது. இறுதியில் 117.34 புள்ளிகள் கூடுதலுடன் 50,731.63-இல் நிலைபெற்றது.

எஸ்பிஐ அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் எஸ்பிஐ 10.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், டாக்டா் ரெட்டி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 2.75 சதவீதம் முதல் 3.75 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

ஆக்ஸிஸ் பேங்க் வீழ்ச்சி: அதேசமயம் ஆக்ஸிஸ் பேங்க் 3.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, எச்சிஎல் டெக், ஆசியன் பெயிண்ட், டெக் மகேந்திரா ஆகியவை 1 முதல் 3.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 28.60 புள்ளிகள் உயா்ந்து 14,824.25-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 15,014.65 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 14,864.75 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மீடியா குறியீடு 4.40 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.