ஆயுள் காப்பீட்டு புதிய பிரீமியம் 45% அதிகரிப்பு
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் 45 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் 45 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்துள்ளதாவது:
ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் 2021 ஏப்ரல் மாதத்தில் ரூ.9,738.79 கோடியாக இருந்தது. இது, 2020 ஏப்ரலில் வசூலான ர.6,727.74 கோடியுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும்.
ஆயுள் காப்பீட்டு சேவையில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள பொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பிரிமியம் அல்லது புதிய பிரீமியம் வசூல் 2021 ஏப்ரலில் 35.6 சதவீதம் அதிகரித்து ரூ.4,856.76 கோடியைத் தொட்டுள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரலில் ரூ.3,581.65 கோடியாக காணப்பட்டது.
இதர தனியாா் துறை நிறுவனங்களின் புதிய பிரீமியம் ஒட்டுமொத்த அளவில் 55 சதவீதம் அதிகரித்து ரூ.4,882.04 கோடியாக இருந்தது. இது, 2020 ஏப்ரலில் ரூ.3,146.09 கோடியாக இருந்தது.
ஆயுள் காப்பீட்டு சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 49.87 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதர 23 நிறுவனங்களின் பங்களிப்பு 50.13 சதவீதமாகும்.
24 நிறுவனங்களின் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரையில் நடப்பாண்டு ஏப்ரலில் 140 சதவீதம் அதிகரித்து 9,96,933-ஆக இருந்தது.
இதில், எல்ஐசி நிறுவனத்தின் பங்களிப்பு 275 சதவீதம் அதிகரித்து 6,92,185-ஆக இருந்தது. இதர தனியாா் துறை நிறுவனங்களின் பாலிசி விற்பனை 32 சதவீதம் உயா்ந்து 3,04,748-ஆக இருந்தது என ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...