கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூபாய் மதிப்பில் 8 வாரங்கள் காணாத வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 7:41 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதும் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு பலவீனமாகவே காணப்பட்டது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.41 வரையிலும், குறைந்தபட்சமாக 74.63 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிவடைந்து 74.44-ஆக நிலைத்தது. ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குப் பிறகு ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு குறைந்த நிலையை எட்டியது இதுவே முதல்முறை என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.54 சதவீதம் அதிகரித்து 81.70 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.860.50 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.