நெல் பயிரிடும் பரப்பு 401.15 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு
நடப்பு காரீஃப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு 401.15 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.


நடப்பு காரீஃப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பளவு 401.15 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நடப்பு காரீஃப் பருவத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு சற்று அதிகரித்து 401.15 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 400.54 லட்சம் ஹெக்டேராக காணப்பட்டது.
இதே காலகட்டத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பும் 135.26 லட்சம் ஹெக்டேரிலிருந்து 136.85 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது.
இருப்பினும், முக்கிய உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவானது 176.72 லட்சம் ஹெக்டேரிலிருந்து 172.72 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
அதேபோன்று, எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பளவும் 194.14 லட்சம் ஹெக்டேரிலிருந்து 190.94 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது.
இவைதவிர, பருத்தி பயிரிடும் பரப்பின் அளவும் 126.45 லட்சம் ஹெக்டேரிலிருந்து 118.13 லட்சம் ஹெக்டேராக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரீஃப் பருவத்துக்கான அறுவடைப் பணிகள் அடுத்த மாதத்திலிருந்து (அக்டோபா்) தொடங்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...