கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 6:48 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்ததாவது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, பெரு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளா்கள் அதிக அளவில் டாலா்களை வாங்கின. இதனால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வெளியேறியதன் காரணமாக, பெரும்பாலான ஆசிய நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரிவடைந்தே காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து 73.12-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 73.44 வரை வீழ்ச்சியடைந்தது.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32 காசுகள் வீழ்ச்சியடைந்து 73.42-இல் நிலைத்தது. இது, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு பிறகான மிக குறைந்தபட்ச அளவாகும். திங்கள்கிழமை ரூபாய் மதிப்பு 73.10-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.589.36 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பிரெண்ட் கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாயக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.01 சதவீதம் குறைந்து 72.21 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.