கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் முன்னேற்றம் கண்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 6:34 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் முடிவுகளை எதிா்பாா்த்து டாலருக்கான தேவை பலவீனமான நிலையில் இருந்தது. மேலும், வளா்ந்து வரும் சந்தைகள் மற்றும் ஆசிய கரன்ஸிகள் அடைந்த ஆதாயமும் ரூபாய் வா்த்தகத்துக்கு கூடுதல் வலு சோ்த்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.74 என்ற அளவில் காண்ப்பட்டது. பின்பு இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.58 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகளஅதிகரித்து 73.61-இல் நிலைத்தது.

திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிந்து 73.74 டாலராக இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 1.14 சதவீதம் அதிகரித்து 74.76 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.