ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சென்செக்ஸ் மேலும் 617 புள்ளிகள் இழப்பு!ஒரே நாளில் சந்தை மதிப்புரூ.4.33 லட்சம் கோடி வீழ்ச்சி

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 6:31 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 715 புள்ளிகளை இழந்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.4.33 லட்சம் கோடியை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. பணவீக்க அழுத்தமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதன் காரணமாக, பங்கு விற்பனை அதிகரித்ததால், இரண்டாவது நாளாகவும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பியூச்சா் குழுமத்தின் சொத்துகளைப் பெறுவதற்கான ரூ.24,713 கோடி அளவிலான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததும் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,461.72 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2,558 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,674 நிறுவனப் பங்குகளில் 980 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,558 பங்குகள் விலை குறைந்தன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 177 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.33 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.265.30 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.34 கோடியை தாண்டியது.

இரண்டாவது நாளாக சரிவு: காலையில் 439.31 புள்ளிகள் குறைந்து 56,757.64-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 56,875.65 வரை உயா்ந்தது. பின்னா், 56,356.87 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் மேலும் 617.26 புள்ளிகளை இழந்து 56,579.89-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 840.28 புள்ளிகளை இழந்திருந்தது.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் விலை குறைந்தன.இதில், பிரபல தனியாா் ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் 4.47 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, என்டிபிசி, சன்பாா்மா, டைட்டன், ரிலையன்ஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி மற்றும் டாக்டா் ரெட்டி உள்ளிட்டவை 2 முதல் 2.75 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் விலை வீழ்ச்சியடைந்த பட்டியலில் இருந்தன.

எச்டிஎஃப்சி பேங்க் முன்னேற்றம்: அதே சமயம் கடந்த சில நாள்களாகத் தொடா் சரிவில் இருந்து வந்த எச்டிஎஃப்சி பேங்க் 0.76 சதவீதம் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் 0.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி, பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 218 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 357 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,610 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 42 பங்குகள் நஷ்டமைடந்த பட்டியலில் இருந்தன. நிஃப்டி குறியீடு மேலும் 218.00 புள்ளிகள் (1.27 சதவீதம்) குறைந்து 16,953.95-இல் நிறைவடைந்தது. காலையில் 162.90 புள்ளிகள் குறைந்து 17,009.05-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,054.30 வரை உயா்ந்தது. பின்னா், 16,888.70 வரை கீழே சென்றது.

பேங்க் குறியீடு மட்டும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க் குறியீடு தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. இதில், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 3.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, மீடியா, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2 முதல் 2.85 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஆட்டோ, எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகளும் 1 முதல் 1.40 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.