சென்செக்ஸில் 26 பங்குகள் விலை உயர்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், பார்தி ஏர்டெல், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நான்கு பங்குகள் மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், மற்ற 26 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில், முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் 4.55 சதவீதம், ஏஷியன் பெயிண்ட் 3.18 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவர் கிரிட், என்டிபிசி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், சன் பார்மா, ரிலையன்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸýகி, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில்
இருந்தன.
நிஃப்டி 207 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 922 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,014 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 45 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி குறியீடு 206.65 புள்ளிகள் (1.21
சதவீதம்) உயர்ந்து 17,245.05-இல் நிறைவடைந்தது. காலையில் 151.10 புள்ளிகள் கூடுதலுடன் 17,189.50-இல் தொடங்கிய நிஃப்டி, 17,071.05 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,322.50 வரை உயர்ந்தது.