தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:11 pm

DIN

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது.

நாட்டின் பணவீக்கம், தொழிலக உற்பத்தி ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாக நடைபெற்றுள்ள இந்த பங்கு வா்த்தகத்தில், சென்செக்ஸ் 130 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தாலும், பின்னா் சரிவிலிருந்து மீண்டு 59,463 புள்ளிகளாக நிலைபெற்றது. இது முந்தைய நாள் சென்செக்ஸைவிட 130 புள்ளிகள் (0.22 சதவீதம்) அதிகமாகும்.

தேசியப் பங்குச் சந்தையிலும், அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி வெள்ளிக்கிழமை 0.22 சதவீதம் (39 புள்ளிகள்) அதிகரித்து 17,698 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.