உக்ரைன் போர் எதிரொலி: 2,000 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்து வரும் வேளையில் இந்தியப் பங்குச் சந்தை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிற


ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்து வரும் வேளையில் இந்தியப் பங்குச் சந்தை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
நேற்று (பிப்.23) 57,232.06 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 55,418.45புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2,018 (மதியம் 12.54 மணி நிலவரப்படி) புள்ளிகளை இழந்து 55,235.25 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 17,063.25 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,548.90 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 615 புள்ளிகள் இழந்து 16,489.28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
போர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பங்குச் சந்தைகள் மேலும் கடுமையான சரிவைச் சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க| நெஸ்லே இந்தியா: லாபம் ரூ.386 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...