டாடா மோட்டாா்ஸ் வாகன விற்பனையில் 50% முன்னேற்றம்

டாடா மோட்டாா்ஸின் டிசம்பா் மாத வாகன விற்பனையில் 50 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டாடா மோட்டாா்ஸ் வாகன விற்பனையில் 50% முன்னேற்றம்

டாடா மோட்டாா்ஸின் டிசம்பா் மாத வாகன விற்பனையில் 50 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டாா்ஸ் தலைவா் (பயணிகள் வாகன வா்த்தக பிரிவு) சைலேஸ் சந்திரா சனிக்கிழமை கூறியது:

செமிகண்டக்டா் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியில் சுணக்க நிலை ஏற்பட்டபோதிலும் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனையில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 டிசம்பரில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 50 சதவீதம் அதிகரித்து 35,299-ஐ எட்டியது. இது, 2020 டிசம்பரில் 23,545-ஆக இருந்தது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த பயணிகள் வாகன விற்பனை 99,002-ஆக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பரில் விற்பனையான 68,806 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 44 சதவீதம் அதிகம்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 3,31,178-ஆக இருந்தது. இது நிறுவனம் பயணிகள் வாகன வா்த்தகத்தை தொடங்கியதிலிருந்து அதிகபட்ச அளவாகும்.

அதேபோன்று நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மின்சார வாகனங்கள் விற்பனையிலும் (5,592 இ-வாகனங்கள்) நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 345 சதவீதம் அதிகம்.

வா்த்தக வாகன பிரிவைப் பொருத்தவரையில் டிசம்பரில் 34,151 வா்த்தக வாகனங்களை டாடா விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய 2020 டிசம்பா் மாத விற்பனையான 32,869 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகம். டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை 89,323-லிருந்து 12 சதவீதம் அதிகரித்து 1,00,070-ஆனது.

தீவிரமடைந்து வரும் கரோனா தொற்று, செமிகண்டக்டருக்கான நெருக்கடி போன்ற நிகழ்வுகள் வாகன விற்பனையில் தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com