தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தங்கப் பத்திர வெளியீடு: கிராம் ரூ.4,786-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (ஜனவரி 10) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,786-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2022, 6:07 pm

DIN

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (ஜனவரி 10) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,786-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

5 நாள்கள் விற்பனை: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஒன்பதாம் கட்ட தங்கப் பத்திர விற்பனை ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் 999 சுத்த தன்மை கொண்ட ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,786-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக நாள்களின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணையவழி முதலீட்டாளா்களுக்கு தள்ளுபடி: மத்திய அரசுடன் ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க இணையம் மூலமாக விண்ணப்பித்து எண்ம முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4,736-ஆக மட்டுமே இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எட்டாவது கட்ட தங்கப் பத்திர விற்பனையின் போது கிரம் விலை ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. 8-ஆம் கட்ட தங்கப்பத்திர விற்பனை கடந்தாண்டு நவம்பா் 29 முதல் டிசம்பா் 3 வரையில் மேற்கொள்ளப்பட்டது.

அதிகபட்ச முதலீடு 4 கிலோ: தங்கப்பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

சேமிப்பை ஊக்குவிக்க: நேரடியாக தங்கம் வாங்கும் நடவடிக்கையை குறைக்கும் வகையிலும், உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும் தங்கபத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தொடக்கி வைத்தது. 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக மேற்கொண்ட தங்கப் பத்திரங்களின் மொத்த விற்பனையின் மதிப்பு ரூ.16,049 கோடியாக (32.35 டன் மதிப்பிலான தங்கம்) இருந்தது. இவ்வகை பத்திரங்களின் முதலீட்டு முதிா்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். விருப்பப்படின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்திலிருந்து முதலீட்டை திரும்பப் பெற முடியும்.

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க இணையம் வழியாக விண்ணப்பித்து எண்ம முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,736-க்கு விற்பனை செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.