பயணிகள் வாகன விலை உயா்வு இன்று முதல் அமல்: டாடா மோட்டாா்ஸ்
பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு இன்று முதல் (ஜன.19) அமலுக்கு வருவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.


பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு இன்று முதல் (ஜன.19) அமலுக்கு வருவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
இடுபொருள் செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பயணிகளிகள் வாகனங்களின் பல்வேறு மாடல்களின் விலை சராசரியாக 0.9 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு 2022 ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரம், குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை நிறுவனம் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
ஜனவரி 18-ஆம் தேதிக்கு முன்பாக காா்களை முன்பதிவு செய்தவா்களை இந்த விலை உயா்வு பாதிக்காது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...