தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்வு

கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து வரும் நிலையில்,  அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா உயர்ந்து 82.81 ஆக முடிவடைந்தது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 3:13 pm

DIN

மும்பை: கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து வரும் நிலையில்,  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா உயர்ந்து 82.81-ஆக முடிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 82.71-ஆக இருந்த நிலையில், அது அதிகபட்சமாக ரூ.82.62 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.82.81 ஆகவும் வர்த்தகமானது. இதுவே வெள்ளியன்று டாலருக்கு எதிராக 9 காசுகள் சரிந்து ரூ.82.88 ஆக இருந்தது.

உலகளாவிய கச்சா எண்ணெய் பெஞ்ச்மார்க் 1.59 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 91.78 அமெரிக்க டாலராக இருந்தது.

30-பங்குகள் கொண்ட ஈக்விட்டி சந்தையில்,  மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 287.70 புள்ளிகள் சரிந்து 59,543.96ஆக முடிந்தது, அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 74.40 புள்ளிகள் சரிந்து 17,656.35 ஆக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.