மும்பை: பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தென்பட்டதால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 334.98 புள்ளிகளை இழந்து 60,506.90ல் நிலைபெற்றது.
இது தவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதால் இது உள்நாட்டு பங்குச்சந்தைகள் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் 500 புள்ளிகளை இழந்த பிறகு, 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீடு 334.98 புள்ளிகள் இழந்து 60,506.90ல் நிலைபெற்றது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 89.45 புள்ளிகள் சரிந்து 17,764.60 ஆக முடிந்தது.
டாடா ஸ்டீல் 2.08 சதவீதம் சரிவுடன் வர்த்தகமானது. அதே வேளையில் கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், அல்ட்ரா சிமென்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டமடைந்தது. மறுபுறம், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர்கிரிட் மற்றும் ஐடிசி ஆகியவை பங்குகள் லாபத்தில் முடிவடைந்தது.
ஆசியாவின் மற்ற இடங்களில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவடைந்தது. அதே நேரத்தில் டோக்கியோ மற்றும் சியோலில் பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.09 சதவீதம் உயர்ந்து 80.01 அமெரிக்க டாலராக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



