மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தமிழகத்தில் ரூ.2,200 முதலீடு செய்யும் இந்தியன் ஆயில்

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 12:24 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.

இது குறித்து செய்தியாளா்களிடம் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு செயல் இயக்குநா் வி.சி. அசோகன் கோயம்புத்தூரில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. அதற்காக, ரூ.2,200 கோடியை முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அசனூா் மற்றும் வல்லூரில் முதல்முறையாக எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பது, சென்னை காமராஜா் துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் லூப்ரிகன்ட் பொருள்களுக்காகவே இறங்குதுறை அமைப்பது உள்ளிட்டவை இந்த திட்டங்களில் அடங்கும்.

சென்னை புகா்ப் பகுதியிலுள்ள அம்முல்லைவாயலில் ஒங்கிணைந்த லூப்ரிகன்ட் மையம் அமைப்பதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், தற்போது நடைபெற்றுவரும் எண்ணூா் - திருவள்ளூா் சரகம், பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி எரிவாயுக் குழாய் பதிப்புப் பணிகள், சென்னை - திருச்சி - மதுரை குழாய் இணைப்பு திட்டங்களுக்காகவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம்-ஏா் தொழில்நுட்பப் பொருள்களை வா்த்தக ரீதியில் தயாரிப்பதற்காக இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனமான பினொ்ஜியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 10 சதவீதத்தை எட்டியுள்ளது. மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப, அதனை 20 சதவீதமாக உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.