நம்பிக்கையை பெற.. முன்கூட்டியே ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி!

முதிர்வு தேதிக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களால் செய்யப்பட்ட ரூ. 7,374 கோடி பங்கு-ஆதரவு நிதியுதவியை முன்கூட்டியே திரும்பசெலுத்தியிருக்கிறது.
நம்பிக்கையை பெற.. முன்கூட்டியே ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி!
நம்பிக்கையை பெற.. முன்கூட்டியே ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி!


புது தில்லி: மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் அதானி குழுமம், செவ்வாயன்று, முதிர்வு தேதிக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களால் செய்யப்பட்ட ரூ. 7,374 கோடி (902 மில்லியன் டாலர்) பங்கு-ஆதரவு நிதியுதவியை முன்கூட்டியே திரும்பசெலுத்தியிருக்கிறது.

"அதானி குழுமத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சிக்குப் பின், ஒட்டுமொத்த ஊக்குவிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 2025 இல் முதிர்ச்சி காலம் இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ. 7,374 கோடி (902 மில்லியன் டாலர்) பங்கு ஆதரவு நிதியுதவியை நாங்கள் திரும்ப செலுத்தியிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம் என அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், 2023ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் அனைத்து பங்கு ஆதரவுடன் மீதமுள்ள கடன்களையும் முன்கூட்டியே செலுத்துவதற்கு அதானி குழுமம் உறுதியளித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் கடன் நிலுவையை திருப்பிச் செலுத்துதலுடன், அதானி  குழுமம் 2,016 மில்லியன் டாலர் பங்கு ஆதரவு நிதியை முன்கூட்டியே செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதிர்வு காலத்துக்கு முன்பே, கடன் நிலுவைகளை திரும்ப செலுத்தி, சர்வதேச மற்றும் தேசிய முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுத்திருக்கும் நிதி நிறுவனங்களிடையே, நம்பிக்கையைப் பெறும் வகையில் அதானி குழுமம் மேற்படி, முன்கூட்டியே கடனை திரும்பச் செலுத்துவது இது மூன்றாவது நிகழ்வாகும். 

உலகப் பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி குழுமம் பெற்றிருக்கும், அதன் நிகரக் கடன் என்பது கடந்த டிசம்பர் 2022 நிலவரப்படி ரூ. 1.96 லட்சம் கோடி. இதனை  கிரெடிட்சைட் 'மிக அதிகப்படியான' கடன் என்று வர்ணித்திருந்தது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் பற்றிய அறிக்கை வெளியிட்டு, பங்குச் சந்தைகளில்  அக்குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தபிறகு, தனது கடன் நிலுவை சுமைகளை அதானி குழுமம் குறைக்கத் தொடங்கியிருக்கிறது. இது நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கையாகவே பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com