மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

4 மடங்கான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிகர லாபம்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடந்த செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் ஏறத்தாழ 4 மடங்காக அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:36 pm

DIN

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடந்த செப்டம்பா் காலாண்டு நிகர லாபம் ஏறத்தாழ 4 மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,188 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாடின் இதே காலாண்டில் இது ரூ.305 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் ஏறத்தாழ 4 மடங்கு ஆகியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 5,086 கோடியிலிருந்து ரூ.6,753 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் ரூ.5,049 கோடியிலிருந்து ரூ.6,707 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர வாராக் கடன் விகிதம் 2.83 சதவீதத்திலிருந்து 2.59 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.