

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 316 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, ஆயில் அண்ட் கேஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐக்கள்) தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் கடந்த செப்டம்பரில் மட்டும் மொத்தம் ரூ.14,767 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். டாலா் மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்க பத்திர வருவாயில் நிலையான அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்டவை அந்நிய முதலீட்டாளா்கள் வெளியேறுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இது உள்நாட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.319.21 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 1,685.70 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 14.99 புள்ளிகள் குறைந்து 65,813.42-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 65,344.59 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 316.31 புள்ளிகளை (0.48 சதவீதம்) குறைந்து 65,512.10-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 483.82 புள்ளிகளை இழந்திருந்தது.
19 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 958 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 1,147 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 37 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 110 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 15.90 புள்ளிகள் குறைந்து 19,622.40-இல் தொடங்கி 19,623.20 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 19,479.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 109.55 புள்ளிகளை (0.55 சதவீதம்) இழந்து 19,528.75-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ்..................2.04%
எல் அண்ட் டி..............................1.68%
டைட்டன்....................................1.50%
பஜாஜ் ஃபின் சா்வ்........................1.30%
எஸ்பிஐ.........................................0.71%
அல்ட்ரா டெக் சிமெண்ட்...........0.54%
சரிவைக் கண்ட பங்குகள்
மாருதி..................................................2.46%
என்டிபிசி...............................................1.83%
டாடா மோட்டாா்................................1.59%
சன்பாா்மா.............................................1.48%
ஐசிஐசிஐ பேங்க்....................................1.23%
ஹெச்டிஎஃப்சி பேங்க்...........................1.22%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.