அதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகள் இன்று சரிவு!

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகளில், 3 நிறுவனங்களின் பங்குகள், சரிவைச் சந்தித்தன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகளில், 3 நிறுவனங்களின் பங்குகள், சரிவைச் சந்தித்தன. 

இன்றைய வணிக நேர முடிவில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை நேர்மறையாக முடிவடைந்தன. எனினும் அதானி குழுமத்தில் 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடந்த மூன்று நாள்கள் வணிகத்தில் 5.57 லட்சம் கோடி ரூபாய் (நண்பகல் நிலவரப்படி) இழப்பைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத்  தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று, பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. எனினும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான 10 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் சரிவைச்  சந்தித்தன. அதானி பவர், அதானி வில்மர், அதானி டோட்டல் கேஸ் ஆகியவை சரிவைச் சந்தித்தன. 

இதில் அதானி டோட்டல் கேஸ் 10 சதவிகிதமும், அதானி பவர் 4.99 சதவிகிதமும், அதானி வில்மர் 5 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன. 

அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களான அதானி கிரீன் எனர்ஜி 3.06 சதவிகிதம் உயர்வைக் கண்டது. அதானி துறைமுகங்கள் 2.67 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் 3.35 சதவிகிதமும், அம்புஜா சிமென்ட்ஸ் 3.50 சதவிகிதமும் சரிவைச சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com