சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கம் விலை ரூ.52,000: புதிய உச்சம்!

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்துள்ளது.

News image
தங்கம் விலை
Updated On :3 ஏப்ரல் 2024, 4:18 am

DIN

சென்னை: சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.6430-க்கும், ஒரு சவரன் ரூ. 51,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ.6,500-க்கும், ஒரு சவரன் ரூ. 52,000-க்கு விற்பனையாகிறது.

செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவையுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.54,000-க்கும் மேல் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து ரூ.84-க்கும் ஒரு கிலோ ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.