11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஹோண்டா காா்கள் விற்பனை 7,071-ஆக அதிகரிப்பு

ஹோண்டா காா்கள் விற்பனை 7,071-ஆக அதிகரிப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:32 pm

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 7,071-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7,071 யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2023 மாா்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 6,692-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 மாா்ச் மாதத்தில் 3,189-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் இதே மாதத்தில் இரு மடங்கு அதிகரித்து 6,860-ஆக உள்ளது.

2023-24 நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட மொத்த விற்பனை 1,24,173-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,14,140-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.