மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

2வது நாளாக பங்குச் சந்தை வணிகம் சரிவு!

சென்செக்ஸ் 692 புள்ளிகளும் நிஃப்டி 208 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜனவரி 2025, 6:38 pm IST

பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஆக. 13) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 692 புள்ளிகளும் நிஃப்டி 208 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.

பங்குச்சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஆக. 13) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 692 புள்ளிகளும் நிஃப்டி 208 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 692.89 புள்ளிகள் சரிந்து 78,956.03 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.87 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து 24,139 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.85 சதவீதம் சரிவாகும்.

வணிகத்தின் தொடக்கத்தில் 79,552 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ், 78,889.38 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். நாளின் பிற்பாதியில் சற்று உயர்ந்து 79,692.55 என்ற இன்றைய நாளின் உச்சத்தை எட்டியது.

பின்னர் 750 புள்ளிகள் வரை சரிந்து 78,956.03 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 21 நிறுவன பங்குகள் சரிவுடன் இருந்தன. எஞ்சிய 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

டைட்டன் கம்பெனி 1.89%, எச்.சி.எல். டெக் 0.47%, நெஸ்ட்லே இந்தியா 0.47%, சன் பார்மா 0.37%, ரிலையன்ஸ் 0.21%, பார்தி ஏர்டெல் 0.08%, டிசிஎஸ் 0.04%, எம்&எம் 0.02%, இன்ஃபோசிஸ் 0.01% உயர்ந்திருந்தன.

அதிகபட்ச சரிவாக எச்.டி.எஃப்.சி. -3.43%, பஜாஜ் ஃபைனான்ஸ் -2.17%, டாடா மோட்டார்ஸ் -2.11%, டாடா ஸ்டீல் -2.10%, எஸ்.பி.ஐ. -1.86% சரிந்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.