ரிலையன்ஸ்- வால்ட் டிஸ்னியின் இந்திய டிஜிட்டல் சேவைகள் இணைப்பு நிறுவனத்துக்கு தலைவராக நீட்டா அம்பானி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து நீட்டா அம்பானி விலகி ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் பணியில் தொடர்ந்து வந்தார்.
பாலிவுட் பிரபலங்களோடு அடிக்கடி நிகழ்வுகளில் கலந்து கொள்கிற நீட்டா, மும்பையில் உள்ள கலாச்சார மையத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளன. இந்த இணைப்பு மூலம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் தனது பலத்தை ரிலையன்ஸ் அதிகரிக்கவுள்ளது.
இணைப்பு நிறுவனத்தில் ரிலையன்ஸ் 51 முதல் 54 சதவிகிதம் பங்குகளை பெறவுள்ளது.
டிஸ்னி 40 சதவிகிதம் அளவுக்கும் போதி ட்ரீ என்கிற கூட்டு முயற்சி நிறுவனம் 9 சதவிகிதம் பங்குகளையும் வகிக்கும் என ரைட்டர் தெரிவித்துள்ளது.