

இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதத்தில் 1,37,551-ஆகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனம் 1,37,551 காா்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 1.28 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,39,347-ஆக இருந்தது.
2022 டிசம்பரில் 1,17,551-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, 2023 டிசம்பரில் 5.86 சதவீதம் குறைந்து 1,10,667-ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் அனைத்து பயணிகள் வாகனங்களின் (பிவி) உள்நாட்டு மொத்த விற்பனை 1,04,778-ஆக உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டின் டிசம்பரில் விற்பனையான 1,12,010 பயணிகள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 6.46 சதவீதம் குறைவாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.