மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை எழுச்சியில் தொடங்கிய பங்குச்சந்தையில் லாபப் பதிவு இருந்ததால், பெரும்பாலான லாபத்தை இழந்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் ஆதாயத்தில் முடிவுற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடர்ந்து, எழுச்சியுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தையில் லாபப் பதிவு வந்தது. ஒருகட்டத்தில் வர்த்தகம் எதிர்மறையாக சென்றதுவாரத்தின் பிற்பகுதியில் கார்ப்ரேட் வருவாய் சீசன் மற்றும் மேக்ரோ எக்னாமிக் தரவு அறிவிப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதே இதற்குக் காரணம். குறிப்பாக, தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், மீடியா, எஃப்எம்சிசி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. இருந்தாலும், ஐடி, மெட்டல், ஃபார்மா, ஹெல்த்கேர், ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. இறுதியில் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.07 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.367.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.16.03 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.155.96 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்:
காலையில் 415.69 புள்ளிகள் கூடுதலுடன் 71,770.91}இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,035.47 வரை மேலே சென்றது. பின்னர், 71,307.27 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 30.99 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 71,386.21}இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது உச்சத்தில் இருந்து 728.20 புள்ளிகள் வரை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,944 பங்குகளில் 2,241 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,606 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 97 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
15 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சன்ஃபார்மா, டாடா ஸ்டீல் உள்பட 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. அதே சமயம், நெஸ்லே, ஏசியன் பெயின்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 32 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 140.60 புள்ளிகள் கூடுதலுடன் 21,653.60}இல் தொடங்கி அதிகபட்சமாக 21,724.45 வரை மேலே சென்றது. பின்னர், 21,513.00 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 31.85 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 21,544.85}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


