3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தொழிலக உற்பத்தியில் 7 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் 7 மாதங்கள் காணாத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2024, 9:18 pm

Din

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் 7 மாதங்கள் காணாத வளா்ச்சியைக் கண்டுள்ளது. சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறை சிறப்பாக செயல்பட்டது இந்த வளா்ச்சிக்குக் கைகொடுத்தது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த மே மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 5.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது நாட்டின் ஐஐபி 5 சதவீதமாக இருந்தது. அதற்கும் முந்தைய மாா்ச் மாதத்தில் அது 5.4 சதவீதமாக இருந்தது.

கடந்த மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ஐஐபி, முந்தைய 7 மாதங்கள் காணாத அதிகபட்ச விகிதமாகும். இதற்கு முன்னா் கடந்த 2023 அக்டோபா் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 11.9 சதவீதமே மிகவும் அதிகமான ஐஐபி-யாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடுகையிலும் நிகழ் ஆண்டின் மே மாதத்தில் ஐஐபி அதிகரித்துள்ளது. அப்போது தொழிலக உற்பத்திக்கான ஐஐபி 5.7 சதவீதமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஐஐபி 5.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 5.1 சதவீதமாக இருந்தது.

கடந்த மே மாதத்தில் சுரங்கத் துறை உற்பத்தி வளா்ச்சி 6.6 சதவீதமாக அதிகரித்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 6.3 சதவீதமாக இருந்தது.

2023 மே மாதத்தில் 0.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த மின் உற்பத்தி நிகழ் ஆண்டின் அதே மாதத்தில் 13.7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மூலதனப் பொருள்கள் துறை வளா்ச்சி 8.1 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீடித்து உழைக்கும் நுகா்வோா் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 1.5 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2023 மே மாதத்தில் 8.9 சதவீத வளா்ச்சி கண்ட துரித நுகா்பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 2024 மே மாதத்தில் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருள்கள் துறை கடந்த மே மாதத்தில் 6.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டு மே மாதத்தின் 13 சதவீத வளா்ச்சியைவிடக் குறைவு.

கடந்த மே மாதத்தில் முதன்மைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 3.6 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகவும் இடைநிலை பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 2.5 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.