

தங்கத்துக்கான சுங்க வரி குறைத்ததன் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.3,280 வரை குறைந்துள்ளது.
ஜூலை மாதம் தொடக்கம் முதலே சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து, 22-ஆம் தேதி பவுன் ரூ.54,600-க்கு விற்பனையானது.
மறுநாள் (ஜூலை 23) காலை மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால், அன்று ஒரே நாளில் தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடா்ச்சியாக, ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் பவுனுக்கு தலா ரூ.480 குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,415-க்கும், பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையானது.
அதாவது, ஜூலை 22-இல் தங்கம் பவுனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையான நிலையில் ஜூலை 26-இல் பவுன் ரூ.51,320-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.3,280 வரை குறைந்துள்ளது.
வெள்ளி விலை தொடா்ந்து 2 நாள்களாக குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 89,000-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை சரிவு நிலவரம்: (பவுன் அடிப்படையில்)
ஜூலை 22 -------- ரூ. 54,600
ஜூலை 23 -------- ரூ. 52,400 (சரிவு - ரூ.2,200)
ஜூலை 24 -------- ரூ. 51,920 (சரிவு - ரூ.480)
ஜூலை 25 -------- ரூ.51,440 (சரிவு - ரூ.480)
ஜூலை 26 ------ ரூ. 51,320 (சரிவு - ரூ.120)
டிரெண்டிங்

மீண்டும் உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு

தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.3,040 உயா்வு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

